Acts Bible Quiz – Aug 2025

/50

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢

மொத்த கேள்விகள்: 50       நேர வரம்பு: 25 நிமிடங்கள்

வழிமுறைகள்:

1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும்.

தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!!

ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇

Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது)


Acts Bible Quiz - Aug 2025

1 / 50

1. ஸ்தேவான் ____________ வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்

2 / 50

2. ______________ நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள்

3 / 50

3. அவன் பிரயாணமாய்ப் போய், _________ சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது

4 / 50

4. அப்பொழுது அவர்கள்: __________ தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி

5 / 50

5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: ஞானஸ்நானம் பெற்றவர்

6 / 50

6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: பேதுருவும் யோவானும் நியாயசங்கத்தில் உரையாற்றியபோது அங்கே இருந்தவர்கள்

7 / 50

7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: அந்தியோகியா சபையின் தீர்க்கதரிசிகளும் போதகர்களும்

8 / 50

8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: பேதுருவின் ஞானதிருஷ்டி

9 / 50

9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: பந்தி விசாரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேர்

10 / 50

10. உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு எத்தனை நாட்கள் தம்மை அப்போஸ்தலர்களுக்கு உயிருடன் காட்சிக்கொடுத்து தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசினார்?

11 / 50

11. சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் எத்தனை வருஷங்கள் தேவன் இஸ்ரவேலுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்தினார்?

12 / 50

12. சப்பாணி குணமடைந்த பிறகு பேதுருவின் செய்தி மூலமாக எத்தனை பேர் விசுவாசிகளானார்கள்?

13 / 50

13. தீவுக்கு முதலாளியாகிய புபிலியு பவுலையும் அவருடன் இருந்தவர்களையும் எத்தனை நாட்கள் ஏற்றுக்கொண்டு பட்சமாய் விசாரித்தான்?

14 / 50

14. இராத்திரியில் பவுலை செசரியாவுக்கு அழைத்துச் செல்ல எத்தனை காலாட்களை ஆயத்தம் பண்ண கட்டளையிடப்பட்டது?

15 / 50

15. எந்த பட்டணத்தில் பிலிப்பு கிறிஸ்துவை பிரசங்கித்து பல அதிசயங்களை செய்ததினால் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று?

16 / 50

16. இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை, எந்த லீசியா நாட்டு பட்டணத்தில் நூற்றுக்கு அதிபதி கண்டுபிடித்தார்?

17 / 50

17. எந்த நேரத்தில் கொர்னேலியு தரிசனம் கண்டான்? ஒன்பதாம் மணி நேரத்திலா ஆறாம் மணி நேரத்திலா ?

18 / 50

18. பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு தனது பிரசங்கத்தின் போது எந்த தீர்க்கதரிசி உரைத்தபடி நிறைவேறிற்று என்று கூறினார்? யோவேலா அல்லது எரேமியாவா?

19 / 50

19. பேதுருவும் யோவானும் விசாரணை செய்யப்பட்டபோது இருந்த பிரதான ஆசாரியன் அன்னாவா அல்லது காய்பாவா?

20 / 50

20. சாலொமோனின் மண்டபத்தில் பேதுரு தனது பிரசங்கத்தில் இயேசுவை என்னவென்று குறிப்பிட்டார்? "ஜீவாதிபதி" என்றா அல்லது "பிரதான மேய்ப்பர்" என்றா?

21 / 50

21. அப்போஸ்தலர் 2-ல் உள்ள விசுவாசிகள் எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்களா அல்லது தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து கொண்டார்களா?

22 / 50

22. இயேசுவின் சகோதரர்கள் சீஷர்களோடும் சில ஸ்திரீகளோடும் மேல்வீட்டில் ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.

23 / 50

23. பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூட பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினான்

24 / 50

24. பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால், லீஸ்திராவின் மக்கள் அவரை "யூப்பித்தர்" என்று அழைத்தனர்

25 / 50

25. ஏரோது யாக்கோபின் சகோதரனான யோவானை பட்டயத்தினாலே கொன்றான்.

26 / 50

26. "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

27 / 50

27. "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

28 / 50

28. "நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

29 / 50

29. "மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

30 / 50

30. சீப்புருதீவானும் லேவியனாகிய நான் என்னுடைய நிலத்தைவிற்று அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தேன். நான் யார்?

31 / 50

31. நான் பெர்னீக்கேயாவுடன் செசரியாவுக்கு வந்து பவுலின் வாதத்தைக் கேட்டேன். நான் யார்?

32 / 50

32. நான் ஒரு பரிசேயனாகவும், நியாயசாஸ்திரியாகவும் இருந்தேன். அப்போஸ்தலர்களை விட்டுவிடுமாறு ஆலோசனை சொன்னேன். நான் யார்?

33 / 50

33. நான் எத்தியோப்பியர்களின் ராஜஸ்திரீ, பிலிப்பு வழியில் என்னுடைய அதிகாரியை சந்தித்தபோது ​​அவர் ஏசாயாவை வாசித்துக் கொண்டிருந்தார். நான் யார்?

34 / 50

34. நான் தியத்தீராவைச் சேர்ந்த இரத்தாம்பரம் விற்கிறவள், பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் என் இருதயத்தைத் திறந்தருளினார். நான் யார்?

35 / 50

35. கர்த்தரைச் சந்தித்த பிறகு, சவுல் தமஸ்குவில் உள்ள நேர்த்தெருவில் உள்ள என் வீட்டில் தங்கினார். நான் யார்?

36 / 50

36. "சீக்கிரமாய் எழுந்திரு" என்று யார் யாரிடம் சொன்னது?

37 / 50

37. "நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது", என்று யார் யாரிடம் சொன்னது?

38 / 50

38. "வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்", என்று யார் யாரிடம் சொன்னது?

39 / 50

39. யூத ஸ்திரீயான துருசில்லா யாருடைய மனைவி?

40 / 50

40. பவுல் இத்தாலிக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டபோது, ​​அவர் ஒப்படைக்கப்பட்ட அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த நூற்றுக்கு அதிபதி யார்?

41 / 50

41. பவுலையும் சீலாவையும் ஏற்றுக்கொண்டதினால், பொல்லாத கூட்டத்தினரால் பிடிக்கப்பட்டு, பட்டணத்து அதிகாரிகளுக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டவர் யார்?

42 / 50

42. அக்கெல்தமா என்ற பெயரின் அர்த்தம் என்ன?

43 / 50

43. தேவாலயத்தின் எந்த வாசலண்டையில் சப்பாணி பிச்சை எடுத்துகொண்டிருந்தான்?

44 / 50

44. பரிசுத்த ஆவியைக் கொடுக்கும் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்படி பேதுருவுக்கும் யோவானுக்கும் பணம் கொடுக்க வந்தது யார்?

45 / 50

45. பவுலுடனும் பர்னபாவுடனும் அந்தியோகியாவுக்கு அனுப்பப்பட தேர்ந்தெடுக்கப்பட்ட யூதாவின் மற்றொரு பெயர் என்ன?

46 / 50

46. லீஸ்திராவில் இருந்த சீஷன் யார், அவருடைய தந்தை ஒரு கிரேக்கர்?

47 / 50

47. மாற்கு என்னும் மறுபேர் கொண்ட யோவானின் தாயார் மரியாளின் வீட்டுக் கதவைப் பேதுரு தட்டியபோது, ​​யார் வந்து ஒற்றுக்கேட்டது ?

48 / 50

48. எத்தனை நாட்கள் சவுல் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்?

49 / 50

49. எத்தனை மணி நேரத்திற்குப் பிறகு சப்பீராள் அனனியாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளே வந்தாள்?

50 / 50

50. சவுலை குணப்படுத்த அனுப்பப்பட்டவர் யார்?

1 thought on “Acts Bible Quiz – Aug 2025”

Leave a Comment