Exodus Bible Quiz – Oct 2025

/50

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢

மொத்த கேள்விகள்: 50       நேர வரம்பு: 25 நிமிடங்கள்

வழிமுறைகள்:

1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும்.

தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!!

ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇

Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது)


Exodus Bible Quiz - Oct 2025

1 / 50

1. அப்பொழுது மோசே: உம்முடைய __________ எனக்குக் காண்பித்தருளும் என்றான்.

2 / 50

2. மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் ______________ அல்ல

3 / 50

3. கர்த்தர் மோசேயிடம்: உன்னைக் காணும்போது அவன் ________ மகிழும்

4 / 50

4. தேவனுக்கு பயந்த இரண்டு எபிரேய மருத்துவச்சிகளின் பெயர்கள் என்ன?

5 / 50

5. மோசேயின் முதல் மகனின் பெயர் என்ன?

6 / 50

6. செங்கடலைக் கடந்த பிறகு, தம்புருகளுடன் பெண்களை வழிநடத்தியது யார்?

7 / 50

7. மார்ப்பதக்கத்தில் எத்தனை கற்கள் இருந்தன?

8 / 50

8. மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்?

9 / 50

9. மோசே பார்வோனிடம் பேசியபோது அவருக்கு எத்தனை வயது?

10 / 50

10. எந்த வாதை எகிப்தின் நிலத்தை தவளைகளால் மூடியது?

11 / 50

11. எகிப்தை எவ்வளவு நாட்கள் இருள் மூடியிருந்தது?

12 / 50

12. எத்தனை இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கால்நடையாக புறப்பட்டனர் (புருஷர்கள் மட்டும்)?

13 / 50

13. பொன் கன்றுக்குட்டி சம்பவத்திற்குப் பிறகு லேவியர்களின் பட்டயதால் எத்தனை பேர் வீழ்ந்தார்கள்?

14 / 50

14. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: ஆசரிப்பு கூடாரம் செய்ய பயன்பட்டவை

15 / 50

15. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: மார்ப்பதக்கத்தின் நாலாம் பத்தி இரத்தினக்கற்கள்

16 / 50

16. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இஸ்ரவேலின் வனாந்திர பிரயாணம்

17 / 50

17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: சித்திரவேலை செய்தவர்கள் (select multiple answer options)

18 / 50

18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: லேவியின் குமாரர்

19 / 50

19. மோசே முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிவதை பார்த்த மலையின் பெயர் என்ன?

20 / 50

20. மோசே மாசா என்றும் மேரிபா என்றும் பெயர் சூட்டியதற்குக் காரணம் என்ன?

21 / 50

21. மோசே எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

22 / 50

22. பெசலெயேல் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

23 / 50

23. அகோலியாப் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

24 / 50

24. யோசுவா எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

25 / 50

25. "கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்?" என்று மோசே சொன்னபோது, ​​எந்தக் கோத்திரத்தினர் அவருடைய பக்கம் நின்றனர்?

26 / 50

26. ஏபோத்தில் இருந்த ஞாபகக்குறிக் கற்கள் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைக் குறிக்கின்றன

27 / 50

27. மோசே செங்கடலில் மிதக்கும் ஒரு கூடையில் பார்வோனின் குமாரத்தியினால் கண்டுபிடிக்கப்பட்டார்.

28 / 50

28. இஸ்ரவேலர் கோசேனில் வசித்து வந்தனர், அங்கு வண்டுகளின் தொல்லை அவர்களைப் பாதிக்கவில்லை.

29 / 50

29. பகலில் அவர்களை வழிநடத்த அக்கினிஸ்தம்பத்திலும் , இரவில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் கர்த்தர் சென்றார்.

30 / 50

30. "மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?" என்று யார் யாரிடம் சொன்னது?

31 / 50

31. ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் என்னுடன் முகமுகமாய்ப் பேசினார். நான் யார்?

32 / 50

32. நான் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்த வாலிபன். நான் யார்?

33 / 50

33. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது நான் யோசேப்பின் எலும்புகளை எடுத்துச் சென்றேன். நான் யார்?

34 / 50

34. மோசேயின் கைகள் உயர்த்தப்பட்டபோது நான் அமலேக்கை முறி அடித்தேன். நான் யார்?

35 / 50

35. விநோதமான வேலைகளை யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டேன். நான் யார்?

36 / 50

36. மன்னா முதலில் எங்கு தோன்றியது?

37 / 50

37. மோசேயின் மாமன் பெயர் என்ன?

38 / 50

38. யுத்தத்தின் போது மோசேயின் கைகளைத் தாங்கியவர்கள் யார்?

39 / 50

39. பிரதான ஆசாரியரின் பரிசுத்த கிரீடத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?

40 / 50

40. வீட்டுவாசல் நிலைக்கால்களில் எந்த மிருகத்தின் இரத்தம் தெளிக்கப்பட்டது ?

41 / 50

41. ஏழாவது வாதை என்ன?

42 / 50

42. மந்திரவாதிகளால் எந்த வாதையை பிறப்பிக்க கூடாமற்போயிற்று ?

43 / 50

43. வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் என்ன செய்தார்கள்?

44 / 50

44. ஏபோத் பின்வரும் அனைத்து பொருட்களாலும் செய்யப்பட்டது, ஆனால் ஒன்றை தவிர. அது என்ன?

45 / 50

45. ஏன் தேவன் மருத்துவச்சிகளுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்?

46 / 50

46. மோசேயின் பெற்றோர் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்?

47 / 50

47. "நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன?", என்று யார் யாரிடம் சொன்னது?

48 / 50

48. "கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள்", என்று யார் யாரிடம் சொன்னது?

49 / 50

49. "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

50 / 50

50. "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

Leave a Comment