Genesis Bible Quiz – Jun 2025 June 28, 2025 by reach.grace146 /50 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 50 நேர வரம்பு: 25 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) Genesis Bible Quiz - Jun 2025 NamePhone NumberEmail 1 / 50 1. யாக்கோபின் குடும்பத்தாரில் இருந்து எகிப்துக்குச் சென்ற மொத்த மக்களின் எண்ணிக்கை என்ன? A. 50 B. 60 C. 66 D. 70 2 / 50 2. கோசேனில் வசிக்க தனது குடும்பத்தை யோசேப்பு அழைத்தபோது இன்னும் எத்தனை ஆண்டுகள் பஞ்சம் வரவிருந்தது? A. 3 B. 5 C. 6 D. 7 3 / 50 3. பென்யமீனை யாக்கோபிடம் பாதுகாப்பாகக் கொண்டுவருவதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக யார் உறுதியளித்தார்கள்? A. ரூபன் B. லேவி C. யூதா D. சிமியோன் 4 / 50 4. நான் ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தி. நான் யார்? A. பஸ்மாத் B. சிப்போராள் C. ஆஸ்நாத் D. சாப்நாத் 5 / 50 5. நான் பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியாகவும், எகிப்தியனாகவும் இருந்தேன். நான் யார்? A. போத்திபார் B. யோசேப்பு C. அபிமெலெக் D. எலியேசர் 6 / 50 6. "இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன்”, என்று சொன்னது யார் ? A. சிமியோன் B. லேவி C. யூதா D. ரூபன் 7 / 50 7. லாபான் யாக்கோபின் சம்பளத்தை எத்தனை முறை மாற்றினான்? A. 7 B. 10 C. 14 D. 18 8 / 50 8. "உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார்", யார் யாரிடம் சொன்னது? A. ஈசாக்கு யாக்கோபிடம் B. ஏசா ரெபெக்காளிடம் C. ரெபெக்காள் ஈசாக்கிடம் D. யாக்கோபு ஈசாக்கிடம் 9 / 50 9. இஸ்மவேல் எத்தனை வருஷம் வாழ்ந்தார்? A. 120 B. 135 C. 137 D. 140 10 / 50 10. "நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்." யார் யாரிடம் சொன்னது? A. ஆபிரகாம் ஈசாக்கிடம் B. ஈசாக்கு வேலைக்காரரிடம் C. ஆபிரகாம் வேலைக்காரரிடம் D. தேவதூதன் ஆபிரகாமிடம் 11 / 50 11. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: லேயாளின் பிள்ளைகள் A. சிமியோன் B. செபுலோன் C. காத் D. இசக்கார் 12 / 50 12. சாராளுக்கு நியாயத்தீர்ப்பாக அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு என்ன கொடுத்தார்? A. நூறு வெள்ளிக்காசு B. தங்கம் மற்றும் ஆடைகள் C. பத்து ஒட்டகங்கள் D. ஆயிரம் வெள்ளிக்காசு 13 / 50 13. நான் ஒரு ஆடு மேய்க்கும் பெண்ணாக இருந்தேன், யாக்கோபு என்னை மிகவும் நேசித்தார். நான் யார்? A. லேயாள் B. ராகேல் C. பில்காள் D. சில்பாள் 14 / 50 14. சோதோம் கொமோரா மீது கர்த்தர் வானத்திலிருந்து எதை வருஷிக்கப்பண்ணினார்? A. அக்கினி, ஆலங்கட்டி மழை B. அக்கினி, புகை C. கந்தகம், அக்கினி D. அக்கினி, புழுதி 15 / 50 15. நான் நாகோரின் மனைவியாகவும், ஆரானின் மகளாகவும் இருந்தேன். நான் யார்? A. இஸ்காள் B. மில்க்காள் C. பில்காள் D. சில்பாள் 16 / 50 16. யாக்கோபு தனக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எங்கே அனுப்பப்பட்டார்? A. எகிப்து B. கானான் C. பதான் அராம் D. பெத்தேல் 17 / 50 17. கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரன் என்று வர்ணிக்கப்படுபவர் யார்? A. நிம்ரோத் B. ஏசா C. இஸ்மவேல் D. லாமேக் 18 / 50 18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: ஏசாவின் மனைவிகள் A. பஸ்மாத் B. ஆதாள் C. திம்னாள் D. அகோலிபாமாள் 19 / 50 19. இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் _____________ நான் எப்படிக் காண்பேன் A. தீங்கை B. துக்கத்தை C. ஆபத்தை D. துன்பத்தை 20 / 50 20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: நோவாவின் குமாரர் A. சேம் B. காம் C. யாப்பேத் D. சேலா 21 / 50 21. ஆபிரகாமின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஆகார் எந்த வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள்? A. பெயெர்செபா B. சீனாய் C. பாரான் D. மீதியான் 22 / 50 22. காகத்திற்குப் பிறகு, நோவா எத்தனை முறை புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார், அது திரும்பி வரவில்லை? A. 1 B. 2 C. 3 D. 4 23 / 50 23. கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பு யோர்தான் சமவெளி எவ்வாறு விவரிக்கப்பட்டது? A. வறண்ட மற்றும் தரிசு B. பாறை மற்றும் செங்குத்தான C. பாலைவன நிலம் D. நீர்வளம் பொருந்தினது 24 / 50 24. நான் யூதாவின் மூத்த மகன், கர்த்தருடைய பார்வையில் நான் பொல்லாதவனானேன், ஆகையால் அவர் என்னைக் கொன்றுபோட்டார். நான் யார்? A. ஏர் B. ஓனான் C. சேலா D. ஈரா 25 / 50 25. "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ", யார் யாரிடம் சொன்னது? A. தேவதூதன் ஆபிரகாமிடம் B. ஆபிரகாம் சாராவிடம் C. கர்த்தர் ஆபிரகாமிடம் D. கர்த்தர் சாராவிடம் 26 / 50 26. இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை ஒப்பிடப்பட்ட கோத்திரம் எது? A. இசக்கார் B. காத் C. தாண் D. சிமியோன் 27 / 50 27. ஏமோரையும் சீகேமையும் கொன்றது யார்? A. இசக்கார் மற்றும் சிமியோன் B. செபுலோன் மற்றும் லேவி C. சிமியோன் மற்றும் லேவி D. ரூபன் மற்றும் சிமியோன் 28 / 50 28. தேவன் நோவாவிடம் கட்டச் சொன்ன பேழையின் நீளம் என்ன? A. 30 முழம் B. 50 முழம் C. 200 முழம் D. 300 முழம் 29 / 50 29. நான் மக்பேலா குகைக்குச் சொந்தமான ஒரு ஏத்தியன். நான் யார்? A. ஏத் B. எப்பெரோன் C. சோகார் D. ஆரான் 30 / 50 30. சாவே பள்ளத்தாக்கின் மற்றொரு பெயர் என்ன? A. ராஜாவின் பள்ளத்தாக்கு B. மரண பள்ளத்தாக்கு C. சாலேமின் பள்ளத்தாக்கு D. எபிரோன் பள்ளத்தாக்கு 31 / 50 31. "அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும்" என்று யார் யாக்கோபிடம் சொன்னது? A. சிமியோன் B. லேவி C. யூதா D. ரூபன் 32 / 50 32. செபுலோனும் நப்தலியும் சில்பாவின் குமாரர் A. சரி B. தவறு 33 / 50 33. சேத்தைப் பெற்ற பிறகு ஆதாம் எத்தனை வருஷம் வாழ்ந்தார்? A. 800 B. 700 C. 850 D. 900 34 / 50 34. பெத்துவேலின் தந்தை யார்? A. ஆரான் B. நாகோர் C. லாபான் D. லோத் 35 / 50 35. ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது அவருக்கு எத்தனை வயது? A. 65 B. 70 C. 75 D. 80 36 / 50 36. ஏனோஸின் தந்தை யார்? A. ஆதாம் B. காயின் C. சேத் D. ஏனோக்கு 37 / 50 37. "என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச்செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்". யார் யாரிடம் சொன்னது? A. யோசேப்பு பானபாத்திரக்காரரிடம் B. பானபாத்திரக்காரர் யோசேப்பிடம் C. சுயம்பாகி யோசேப்பிடம் D. பார்வோன் யோசேப்பிடம் 38 / 50 38. எந்த தலைமுறையில் ஆபிரகாமின் சந்ததியினர் தங்கள் தேசத்திற்குத் திரும்புவார்கள் என்று தேவன் கூறினார்? A. இரண்டாம் தலைமுறை B. மூன்றாம் தலைமுறை C. நான்காம் தலைமுறை D. ஐந்தாம் தலைமுறை 39 / 50 39. யாக்கோபு தேவதூதர்களைச் சந்தித்த இடத்திற்கு என்ன பெயர் வைத்தார்? A. மக்னாயீம் B. பெத்தேல் C. பெனியேல் D. கலயெத் 40 / 50 40. இஸ்மவேல் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவருக்கு எத்தனை வயது? A. 12 B. 13 C. 14 D. 15 41 / 50 41. ஜீவ விருட்சத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்தின் கிழக்கே தேவன் என்ன வைத்தார்? A. சுடரொளிப் பட்டயம் B. கேரூபீன்கள் C. நெருப்பு D. A மற்றும் B 42 / 50 42. யோர்தானுக்கு அப்பால் எகிப்தியர்கள் யாக்கோபுக்காக துக்கம் அனுசரித்த ஸ்தலத்திற்கு என்ன பெயர் வழங்கப்பட்டது? A. பெயெர்செபா B. சாவே C. ராமா D. ஆபேல்மிஸ்ராயீம் 43 / 50 43. காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருந்த துரவு எது? A. பெயெர்செபா B. லகாய்ரோயீ C. ஏலிம் D. சித்னா 44 / 50 44. யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? A. 7 B. 10 C. 17 D. 20 45 / 50 45. கேராரின் மேய்ப்பர்களால் வாக்குவாதம்பண்ணின முதல் துரவின் பெயர் என்ன? A. ஏசேக்கு B. ரெகொபோத் C. சித்னா D. லகாய்ரோயீ 46 / 50 46. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: ஏதேன் தோட்டத்திலிருந்து கிளைத்த ஆறுகள் A. பைசோன் B. நைல் C. கீகோன் D. ஐபிராத்து 47 / 50 47. சீகேமில் யாக்கோபு கட்டிய பலிபீடத்திற்கு அவர் என்ன பெயர் வைத்தார்? A. எபெனேசர் B. எல்ஷடாய் C. யேகோவாயீரே D. ஏல்எல்லோகே 48 / 50 48. யாக்கோபு யாரை ஆசீர்வதிக்கும்போது தன் வலது கையை வைத்தார்? A. மனாசே B. எப்பிராயீம் C. பென்யமீன் D. யோசேப்பு 49 / 50 49. ஆழத்தின்மேல் என்ன இருந்தது? A. ஒளி B. ஜலம் C. இருள் D. நெருப்பு 50 / 50 50. ஜலப்பிரளயத்தின் போது பூமியில் எத்தனை நாட்கள் ஜலம் பிரவாகித்துக்கொண்டிருந்தது? A. 40 B. 100 C. 150 D. 200 By Wordpress Quiz plugin
Good
Thank you Sister!