Matthew Bible Quiz – Feb 2025

/42

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢

மொத்த கேள்விகள்: 42       நேர வரம்பு: 40 நிமிடங்கள்

வழிமுறைகள்:

1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 40 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும்.

தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!!

ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇

Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது)


Matthew Bible Quiz - Feb 2025

1 / 42

1. அரிமத்தியா ஊரானாகிய யோசேப்பும் இயேசுவின் சீஷனாயிருந்தார்

2 / 42

2. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை

3 / 42

3. சிரேனே ஊரானாகிய என்னை இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி பலவந்தம்பண்ணினார்கள். நான் யார்?

4 / 42

4. இயேசுவின் விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுவதற்கு நான் தலைமை தாங்கிய ஆளுநராக இருந்தேன். நான் யார்?

5 / 42

5. நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யார் யாரிடம் சொன்னது?

6 / 42

6. "ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது" என்று இயேசு யாரிடம் சொன்னார்?

7 / 42

7. "மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா" என்று இயேசு யாரை பார்த்து சொன்னார்?

8 / 42

8. "உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள்" என்று பிலாத்து யாரிடம் சொன்னார்?

9 / 42

9. "நீர் சொன்னபடிதான்; அன்றியும் மனுஷகுமாரன் சர்வ வல்லவருடைய வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்" என்று இயேசு யாரிடம் சொன்னார்?

10 / 42

10. "இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தது யார்?

11 / 42

11. "புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தது யார்?

12 / 42

12. "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்" என்று தீர்க்கதரிசனம் உரைத்தது யார்?

13 / 42

13. இயேசு நாலாயிரம் பேரை எத்தனை அப்பங்களைக் கொண்டு போஷித்தார்?

14 / 42

14. எந்த மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்?

15 / 42

15. தாம் பிதாவை வேண்டிக்கொண்டால் எத்தனை லேகியோனுக்கு அதிகமான தூதரை தம்மிடத்தில் அழைக்க முடியும் என்று இயேசு குறிப்பிட்டார்?

16 / 42

16. அசுத்த ஆவி தான் விட்டு வந்த வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி தன்னிலும் பொல்லாத வேறு எத்தனை ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டு வரும் என்று இயேசு சொன்னார்?

17 / 42

17. 4000 பேரை போஷித்த பிறகு இயேசு எங்கே சென்றார்?

18 / 42

18. இயேசு உயிர்த்தெழுந்த பிறகு சீஷர்களுக்கு முன்னே எங்கே போகிறார் என்று தேவதூதன் சொன்னான்?

19 / 42

19. கொல்கொதா என்ற இடத்தின் அர்த்தம் என்ன?

20 / 42

20. எந்த இடத்தில ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமள தைலத்தை இயேசுவின் சிரசின்மேல் ஊற்றினாள்?

21 / 42

21. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசுவின் சகோதரர்கள்

22 / 42

22. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசுவை சிலுவையில் அறையப்பட்டபோது தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்த ஸ்திரீகள்

23 / 42

23. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசு பிறப்பின் சம்பவத்தில் சொப்பனம் கண்டவர்கள்

24 / 42

24. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இயேசுவின் சீஷர்கள்

25 / 42

25. கோடிட்ட இடத்தை நிரப்புக: ______________ பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.

26 / 42

26. கோடிட்ட இடத்தை நிரப்புக: இது _________________ அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.

27 / 42

27. கோடிட்ட இடத்தை நிரப்புக: பலியையல்ல, _____________ விரும்புகிறேன்

28 / 42

28. கோடிட்ட இடத்தை நிரப்புக: நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் ___________________; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும்.

29 / 42

29. "பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

30 / 42

30. "மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

31 / 42

31. "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

32 / 42

32. "இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது?

33 / 42

33. யூதாஸ் திருப்பிக் கொடுத்த முப்பது வெள்ளிக் காசுகளைக் கொண்டு வாங்கிய நிலத்துக்கு என்ன பெயர் சூட்டப்பட்டது?

34 / 42

34. இயேசு சிலுவையில் அறையப்பட்டபோது அவருடைய சிரசுக்கு மேல் வைக்கப்பட்ட மேல் விலாசம் என்ன ?

35 / 42

35. மத்தேயு 12ன்படி நியாயத்தீர்ப்பு நாளில் மனுஷர் எதற்கு கணக்கொப்புவிக்கவேண்டும் ?

36 / 42

36. "இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை" என்று இயேசு யாரை குறித்து சொன்னார்?

37 / 42

37. "ஏலி, ஏலி, லாமா சபக்தானி" என்று இயேசு கூப்பிட்ட வாக்கியத்தின் அர்த்தம் என்ன?

38 / 42

38. மத்தேயு சுவிசேஷத்தில் 'அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்' என்று இயேசு எத்தனை முறை தமது உவமைகளில் மட்டும் கூறினார்?

39 / 42

39. மத்தேயு சுவிசேஷத்தில் இயேசு எத்தனை முறை 'அற்பவிசுவாசிகளே(யே)' என்று கூறினார்?

40 / 42

40. மத்தேயு பதிவு செய்தபடி இயேசுவை 'ரபி' என்று அழைத்த ஒரே சீடர் யார்?

41 / 42

41. உவமைகளை பொருத்துக:

1. கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்ட விதை
2. களைகள்
3. கடுகுவிதை
4. புளித்தமாவு
5. திராட்சத்தோட்டத்து வேலையாட்கள்

42 / 42

42. அற்புதங்களை பொருத்துக:

1. நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன்
2. குருடர்
3. பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரீ
4. திமிர்வாதக்காரன்
5. குஷ்டரோகி

Leave a Comment