Joshua Bible Quiz – Feb 2026

/50

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢

மொத்த கேள்விகள்: 50       நேர வரம்பு: 25 நிமிடங்கள்

வழிமுறைகள்:

1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும்.

தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!!

ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇

Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது)


Joshua Bible Quiz - Feb 2026

1 / 50

1. நான் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தேன். நான் யார்?

2 / 50

2. நான் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் எனக்கு கிடைத்தது. நான் யார்?

3 / 50

3. நான் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள திம்நாத்-சேராவில் அடக்கம் செய்யப்பட்டேன். நான் யார்?

4 / 50

4. நான் ஆகானின் தந்தை. நான் யார்?

5 / 50

5. யோசுவாவின் காலத்தில் நான் பிரதான ஆசாரியனாக இருந்தேன், தேசத்தைப் பிரிப்பதற்கு உதவினேன். நான் யார்?

6 / 50

6. நான் மலைநாட்டை கேட்டுக்கொண்டு, ஆனாக்கின் புத்திரரைத் துரத்தினேன். நான் யார்?

7 / 50

7. நான் எருசலேமின் ராஜாவாக இருந்து, கிபியோனுக்கு விரோதமாக மற்ற நான்கு ராஜாக்களை நடத்தினேன். நான் யார்?

8 / 50

8. "நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன", என்று யார் யாரிடம் சொன்னது?

9 / 50

9. "அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம்", என்று யார் யாரிடம் சொன்னது?

10 / 50

10. "நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள்", என்று யார் யாரிடம் சொன்னது?

11 / 50

11. "நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள்", என்று யார் யாரிடம் சொன்னது?

12 / 50

12. "எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு; நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால்", என்று யார் யாரிடம் சொன்னது?

13 / 50

13. "உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார்", இது எந்த வசனத்தில் உள்ளது?

14 / 50

14. மூன்றாம் சீட்டு எந்த கோத்திரத்திற்குப் விழுந்தது?

15 / 50

15. ஆகான் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவன்?

16 / 50

16. ஆயி பேத்தேலின் மேற்கு பக்கத்தில் இருந்தது

17 / 50

17. இஸ்ரவேலர் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளே மன்னா நிறுத்தப்பட்டது

18 / 50

18. ஐந்து எமோரிய ராஜாக்கள் எந்த குகையில் மறைந்துகொண்டார்கள்?

19 / 50

19. யோசுவா தன் கண்களை உயர்த்திப் பார்த்தபோது, ​​உருவிய பட்டயத்துடன் தனக்கு எதிரே ஒருவர் நிற்பதை கண்ட நகரம் எது?

20 / 50

20. எரிகோவைப் பார்வையிட யோசுவா எங்கிருந்து ரகசியமாக வேவுகாரர்களை அனுப்பினார்?

21 / 50

21. யோசுவாவுக்குச் சுதந்தரமாக வழங்கப்பட்ட பட்டணம் எது?

22 / 50

22. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: ஆகான் திருடியவை

23 / 50

23. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: கிபியோனியர் எடுத்துச் சென்றவை

24 / 50

24. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: மோரியர் ராஜாக்கள்

25 / 50

25. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: ஆனாக்கின் புத்திரர்

26 / 50

26. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: செலொப்பியாத்தின் குமாரத்திகள்

27 / 50

27. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: இவை கர்த்தருடைய ஆலயப் பொக்கிஷத்தில் வைக்கப்பட்டன.

28 / 50

28. பெத்தேலுக்கும் ஆயிக்கும் இடையில் எத்தனை பேரை யோசுவா அழைத்துச் சென்று பதுங்க வைத்தார்?

29 / 50

29. யோர்தானுக்கு மேற்கு பக்கத்தில் யோசுவாவும் இஸ்ரவேலரும் தோற்கடித்த ராஜாக்கள் எத்தனை?

30 / 50

30. மோசே காலேபை காதேஸ் பர்னேயாவிலிருந்து தேசத்தை வேவு பார்க்க அனுப்பியபோது அவருக்கு எத்தனை வயது?

31 / 50

31. மீதமிருந்த தேசம் சீராய்ந்து பங்கிடப்படுவதற்கு முன் எத்தனை பங்குகளாகப் பிரிக்கப்பட்டது ?

32 / 50

32. யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரிடத்தில் இருந்து நிலத்தை எத்தனை வெள்ளிக்காசுகளுக்குக் வாங்கினார்?

33 / 50

33. யோசுவா எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

34 / 50

34. ஆயி மனுஷர் இஸ்ரவேலரில் எத்தனை பேரை அடித்துக்கொன்றார்கள்?

35 / 50

35. எரிகோ மதில் இடிந்து விழுவதற்கு முன் இஸ்ரவேலர் மொத்தம் எத்தனை தடவை அதைச் சுற்றினார்கள்?

36 / 50

36. எரிகோ சமவெளிக்கு கர்த்தருக்குமுன் யுத்தத்திற்காக எத்தனை பேர் ஆயத்தமாய்ப் புறப்பட்டார்கள்?

37 / 50

37. யோர்தானின் நடுவில் யோசுவா எத்தனை கற்களை நிறுத்தினார்?

38 / 50

38. யோசுவாவிடத்திற்குத் திரும்புவதற்கு முன் இரண்டு வேவுகாரரும் மலைப்பகுதியில் எத்தனை நாள் தங்கியிருந்தார்கள்?

39 / 50

39. காலேப்பின் மகள் யார்?

40 / 50

40. கெனாஸின் மகன் யார்?

41 / 50

41. தெபீரின் முந்தைய பெயர் என்ன?

42 / 50

42. எப்புன்னேயின் மகன் யார்?

43 / 50

43. ஆனாக்கின் தந்தை யார்?

44 / 50

44. யோர்தானருகில் ரூபேன், காத் புத்திரர் கட்டிய பலிபீடத்துக்கு வைத்த பெயர் என்ன?

45 / 50

45. நூனின் மகன் யார்?

46 / 50

46. ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் யார்?

47 / 50

47. "நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்ற வசனம் எந்த அதிகாரத்தில் உள்ளது?

48 / 50

48. தோற்கடிக்கப்பட்ட ராஜாக்களின் விரிவான பட்டியல் எந்த அதிகாரத்தில் உள்ளது?

49 / 50

49. சூரியனே, நீ _______ மேலும், சந்திரனே, நீ __________ பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள்

50 / 50

50. ஆகையால் கர்த்தருக்குப் பயந்து, அவரை _________ மற்றும் _________ சேவித்து, உங்கள் பிதாக்கள் சேவித்த தெய்வங்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள்

Leave a Comment