Judges Bible Quiz – Jun 2026

/50

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢

மொத்த கேள்விகள்: 50       நேர வரம்பு: 25 நிமிடங்கள்

வழிமுறைகள்:

1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும்.

தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!!

ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇

Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது)


Judges Bible Quiz - Jun 2026

1 / 50

1. யோதாமின் உவமையில், "தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என்கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ" என்று கூறிய மரம் எது?

2 / 50

2. அபிமெலேக்கு சீகேம் பட்டணத்தை அழித்த பிறகு அதன் மேல் எதைத் தூவினான்?

3 / 50

3. ரிம்மோன் கன்மலைக்கு தப்பிச் சென்ற பென்யமீனியர் எத்தனை பேர்?

4 / 50

4. சிம்சோன் இஸ்ரவேலை எத்தனை ஆண்டுகள் நியாயந்தீர்த்தார்?

5 / 50

5. "ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு" இதை யார் யாரிடம் கூறினார்?

6 / 50

6. "இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது" இதை யார் யாரிடம் கூறினார்?

7 / 50

7. "கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்" இதை யார் யாரிடம் கூறினார்?

8 / 50

8. நான் கிதியோனின் முதற்பேறான மகன். சேபாவையும் சல்முன்னாவையும் கொல்லும்படி என் தந்தை என்னைக் கேட்டார். நான் யார்?

9 / 50

9. என் மகன் பின்னர் இடித்துப் போட்ட பாகாலின் பலிபீடம் என்னுடையது. நான் யார்?

10 / 50

10. நான் மெசொப்பொத்தாமியாவின் ராஜா; எட்டு ஆண்டுகள் இஸ்ரவேலரை ஒடுக்கினேன். நான் யார்?

11 / 50

11. கிபியாவின் துஷ்டர்களை இஸ்ரவேலரிடம் ஒப்புக்கொடுக்க மறுத்தோம். நாங்கள் யார்?

12 / 50

12. நான் பூவாவின் மகனும், தோதோவின் பேரனும் ஆவேன். நான் இருபத்து மூன்று ஆண்டுகள் இஸ்ரவேலை நியாயந்தீர்த்தேன். நான் யார்?

13 / 50

13. முன்பு எனக்கு லூஸ் என்று பெயர். நான் யார்?

14 / 50

14. கிதியோனின் எழுபது மகன்கள் அனைவரும் அபிமெலேக்கினால் கொல்லப்பட்டனர்.

15 / 50

15. கிபியாவில் இருந்த முதியவர் முதலில் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்.

16 / 50

16. அந்த லேவியன் முதலில் எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்தவன்.

17 / 50

17. சிம்சோனின் பெற்றோர், அவன் பெலிஸ்திய ஸ்திரீயை விரும்பியது கர்த்தரால் உண்டானது என்பதை அறிந்திருந்தனர்.

18 / 50

18. எப்பிராயீமியர் எப்தாவின் வீட்டை நெருப்பால் எரித்துவிடுவோம் என்று மிரட்டினர்.

19 / 50

19. யூதாவும் சிமியோனும் கானானியருக்கு எதிராக ஒன்றாகப் போரிட்டனர்.

20 / 50

20. கிதியோன் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

21 / 50

21. எந்தக் கோத்திரத்தார் ஆட்டுத்தொழுவங்களின் நடுவில் தங்கியிருந்தார்கள்?

22 / 50

22. பாராக் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

23 / 50

23. ஒத்னியேல் எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்?

24 / 50

24. "ஷிபோலேத்" என்ற உச்சரிப்பு சோதனையால் எப்பிராயீமியர் யாரிடமிருந்து வேறுபடுத்தப்பட்டனர்?

25 / 50

25. தோலா எந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவன்?

26 / 50

26. சீகேமை அழித்த பிறகு அபிமெலேக்கு எந்த நகரத்திற்குச் சென்றான்?

27 / 50

27. கிதியோன் முதலில் அப்பம் கேட்ட நகரம் எது?

28 / 50

28. கர்த்தருடைய தூதன் எந்த ஊரில் இருந்த கர்வாலிமரத்தின்கீழ்தோன்றினார்?

29 / 50

29. கர்த்தர் சீசெராவின் படையை எந்த ஆற்றங்கரையில் தோற்கடித்தார்?

30 / 50

30. யோசுவா எங்கு அடக்கம் செய்யப்பட்டார்?

31 / 50

31. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: கிதியோனின் 300 வீரர்கள் எடுத்துச் சென்றிராத பொருள் எது?

32 / 50

32. "விழித்தெழு, விழித்தெழு" என்ற சொற்றொடர் எத்தனை முறை வருகிறது?

33 / 50

33. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: தெபோராளின் பாடலில் குறிப்பிடப்படாத கோத்திரம் எது?

34 / 50

34. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: சீசெராவின் மரணத்துடன் தொடர்புடைய பொருள்

35 / 50

35. பொருத்தமற்றதைத் தேர்ந்தெடுக்கவும்: மீகாவின் ஆராதனைப் பொருட்கள்

36 / 50

36. பாராக் உடன் தாபோர் மலையின்மேல் சென்றவர்கள் எத்தனை பேர்?

37 / 50

37. பென்யமீனர்கள் ரிம்மோன் கன்மலையில் எத்தனை மாதங்கள் தங்கியிருந்தனர்?

38 / 50

38. மீகாவின் வீட்டிற்குள் சென்று செதுக்கிய சிலையையும் ஏபோதையும் எடுத்துச் சென்றவர்கள் எத்தனை பேர்?

39 / 50

39. மீகா லேவியனுக்கு ஆண்டுதோறும் எத்தனை சேக்கல் வெள்ளியைக் கூலியாகக் கொடுப்பதாகச் சொன்னான்?

40 / 50

40. பெலிஸ்தியரின் ஒவ்வொரு அதிபதியும் தெலீலாளுக்கு எத்தனை வெள்ளிக்காசுகளை வாக்குறுதி அளித்தனர்?

41 / 50

41. கிதியோனின் வேலைக்காரனின் பெயர் என்ன?

42 / 50

42.
ஏகூத்  கொன்ற மோவாபின் ராஜாவின் பெயர் என்ன?

43 / 50

43. போகீமில் பேசிய தூதருக்கு வழங்கப்பட்ட பட்டம் என்ன?

44 / 50

44. லேகியில் தோன்றிய நீரூற்றுக்கு என்ன பெயர் வைக்கப்பட்டது?

45 / 50

45. யெப்தாவின் தந்தையின் பெயர் என்ன?

46 / 50

46. யோதாம் ______ மலையின் உச்சியில் நின்று உரத்த சத்தமாகப் பேசினான்.

47 / 50

47. "நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை" என்று இஸ்ரவேலர் ______ இல் சத்தியம் செய்திருந்தனர்.

48 / 50

48. கர்த்தருடைய தூதன் ______ லிருந்து போகீமுக்கு வந்தார்.

49 / 50

49. லேவியனுடைய வேலைக்காரன் ______ பட்டணத்தில் தங்கலாம் என்று ஆலோசனை கூறினான்; ஆனால் லேவியன் மறுத்தான்.

50 / 50

50. லாயீஸைப் பிடித்தபின் தாண் கோத்திரத்தார் அந்த நகரத்திற்கு ______ என்று பெயரிட்டனர்.

Leave a Comment