Proverbs Bible Quiz – Apr 2025 April 26, 2025 by reach.grace146 /50 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 50 நேர வரம்பு: 25 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) Proverbs Bible Quiz - Apr 2025 NamePhone NumberEmail 1 / 50 1. நீதிமொழிகள் 30-ஆம் அதிகாரத்தை எழுதியவர் யார்? A. லேமுவேல் B. சாலொமோன் C. தாவீது D. ஆகூர் 2 / 50 2. வானத்தின் உயரத்தையும் பூமியின் ஆழத்தையும் போல, ஆராய முடியாதது எது? A. மனிதனின் ஞானம் B. ராஜாக்களின் இருதயம் C. மனிதனின் இருதயம் D. மனிதனின் நீதி 3 / 50 3. மெதுவான பிரதியுத்தரம் ___________ மாற்றும் A. உக்கிரத்தை B. மதியீனத்தை C. துன்மார்க்கத்தை D. இவைகளில் ஒன்றும் இல்லை 4 / 50 4. விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீர் எதுக்கு சமானம்? A. ஒரு ஊக்க வார்த்தை B. ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது C. தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி D. புத்துணர்ச்சியூட்டும் காற்று 5 / 50 5. அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. நீதிமொழிகள் 17:18 B. நீதிமொழிகள் 16:18 C. நீதிமொழிகள் 15:18 D. நீதிமொழிகள் 14:18 6 / 50 6. யார் சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள்? A. சோம்பேறி B. ராஜா C. நீதிமான் D. மூடன் 7 / 50 7. சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்; கர்த்தருக்குப் _____________ ஸ்திரீயே புகழப்படுவாள். A. அடங்கியிருக்கிற B. கீழ்ப்படிகிற C. சேவைசெய்கிற D. பயப்படுகிற 8 / 50 8. யார் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன்? A. கிசுகிசுக்கும் ஒரு மனுஷன் B. பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் C. யோசிக்காமல் பேசும் ஒரு மனுஷன் D. சண்டையை விரும்பும் ஒரு மனுஷன் 9 / 50 9. அநியாயத்தை விதைக்கிறவன் என்னத்தை அறுப்பான்? A. வருத்தம் B. சமாதானம் C. அன்பு D. மகிழ்ச்சி 10 / 50 10. எது வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்? A. நிறைய வார்த்தைகளைக் கொண்ட ஒரு முட்டாள் B. செல்வம் படைத்த பெருமைமிக்க மனிதர் C. சாக்குப்போக்கு சொல்லும் ஒரு சோம்பேறி மனிதன் D. நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் 11 / 50 11. ஏழைக்கு இரங்குகிறவன் யாருக்குக் கடன்கொடுக்கிறான்? A. அயலான் B. கர்த்தர் C. ராஜா D. ஆசாரியர் 12 / 50 12. ராஜாவின் உறுக்குதல் எதற்கு சமானம்? A. பொங்கி எழும் நெருப்பு B. மோதும் அலைகள் C. சிங்கத்தின் கெர்ச்சிப்பு D. இடியுடன் கூடிய மழை 13 / 50 13. எது அநேக சிநேகிதரைச் சேர்க்கும்? A. செல்வம் B. ஞானம் C. மகிழ்ச்சி D. வல்லமை 14 / 50 14. ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட எதற்குச் சமானம்? A. முத்துக்கள் B. திராட்சை C. நாணயங்கள் D. பொற்பழங்கள் 15 / 50 15. குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும். இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. நீதிமொழிகள் 31:21 B. நீதிமொழிகள் 11:31 C. நீதிமொழிகள் 21:31 D. நீதிமொழிகள் 10:31 16 / 50 16. மரணமும் ஜீவனும் எதின் அதிகாரத்திலிருக்கும்? A. வாள் B. நாவு C. கை D. வாய் 17 / 50 17. யார் பயந்து தீமையை விட்டு விலகுகிறான்? A. மூடன் B. துன்மார்க்க ஸ்திரீ C. சோம்பேறி D. ஞானமுள்ளவன் 18 / 50 18. நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் ___________ வீண்போகாது A. மகிழ்ச்சி B. பிரயாசம் C. நம்பிக்கை D. விசுவாசம் 19 / 50 19. யார் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்? A. காட்டிக்கொடுப்பவன் B. புறங்கூறித் திரிகிறவன் C. மூடன் D. சோம்பேறி 20 / 50 20. கல்லை விட கனமானதும் மணலைப் விட பாரமானதும் எது? A. மூடனுடைய கோபம் B. பாவம் C. ராஜாவுடைய கோபம் D. கர்த்தருக்கு பயம் 21 / 50 21. புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் எத்தனை பேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்? A. மூன்று B. ஐந்து C. ஏழு D. பத்து 22 / 50 22. மனமகிழ்ச்சியை பற்றி நீதிமொழிகள் என்ன சொல்கிறது? A. நல்ல ஒளஷதம் B. முட்டாள்தனத்தின் அடையாளம் C. தவிர்க்க வேண்டும் D. அரிது 23 / 50 23. _________ அவமதிக்கிறவன் நாசமடைவான் A. ஏழையை B. திருவசனத்தை C. ஞானியை D. கட்டளையை 24 / 50 24. யாருடைய நாவு சுத்தவெள்ளி? A. நீதிமான் B. ஞானி C. மூடன் D. சோம்பேறி 25 / 50 25. கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது. இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. நீதிமொழிகள் 11:10 B. நீதிமொழிகள் 5:6 C. நீதிமொழிகள் 1:7 D. நீதிமொழிகள் 11:1 26 / 50 26. முத்துக்களைப்பார்க்கிலும் நல்லது எது? A. வெள்ளி B. ஞானம் C. வல்லமை D. மகிழ்ச்சி 27 / 50 27. துன்மார்க்கர் எழும்பும்போது என்ன நடக்கும்? A. மனுஷர் புலம்புகிறார்கள் B. மனுஷர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் C. மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள் D. இவைகளில் ஒன்றும் இல்லை 28 / 50 28. பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றுவேன், முடிவிலே பாம்பைப்போல் கடிப்பேன், விரியனைப்போல் தீண்டுவேன். நான் யார்? A. தேன் B. எண்ணெய் C. தண்ணீர் D. மதுபானம் 29 / 50 29. யார் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்? A. அந்நியர் B. சிநேகிதன் C. சத்துரு D. மூடன் 30 / 50 30. யாருடைய வீடு பாதாளத்துக்குப்போம் வழி? A. பரஸ்திரீ B. துன்மார்க்க ஸ்திரீ C. புத்தியீன ஸ்திரீ D. அந்நிய ஸ்திரீ 31 / 50 31. குணசாலியான ஸ்திரீயின் நாவின்மேல் என்ன இருக்கிறது? A. கருணை B. ஞானம் C. தயையுள்ள போதகம் D. சத்தியம் 32 / 50 32. துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் விருத்தியடைவான் A. சரி B. தவறு 33 / 50 33. தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் என்ன இருக்கிறது? A. கபடம் B. பொய் C. சதி D. தீமை 34 / 50 34. நீதிமான் எத்தனை தரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்? A. மூன்று B. ஐந்து C. ஏழு D. பத்து 35 / 50 35. கர்த்தர் யாருடைய பொருளை அகற்றிவிடுகிறார்? A. துன்மார்க்கர் B. திமிர் பிடித்தவன் C. பேராசைக்காரன் D. விசுவாசமற்றவர் 36 / 50 36. சோம்பேறியே, நீ ___________ போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். A. குருவியிடம் B. வெளிமானிடம் C. வெட்டுக்கிளியினிடம் D. எறும்பினிடத்தில் 37 / 50 37. கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. நீதிமொழிகள் 8:20 B. நீதிமொழிகள் 10:22 C. நீதிமொழிகள் 15:22 D. நீதிமொழிகள் 21:10 38 / 50 38. யாருடைய வாய் ஜீவ ஊற்று? A. புத்திசாலி B. அன்பானவர் C. நீதிமான் D. நேர்மையானவர் 39 / 50 39. எனக்கு பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், கோடைகாலத்தில் எனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் எனக்கு தானியத்தைச் சேர்த்து வைப்பேன். நான் யார்? A. குருவி B. எறும்பு C. வெளிமான் D. வெட்டுக்கிளி 40 / 50 40. யார் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்? A. பொய்யர் B. ஏமாற்றுபவர் C. பரஸ்திரீ D. துன்மார்க்கர் 41 / 50 41. அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும் A. சரி B. தவறு 42 / 50 42. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: கர்த்தர் வெறுக்கிற ஏழு காரியங்கள் A. குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை B. பொய்நாவு C. மேட்டிமையான கண் D. பொறாமையின் ஆவி 43 / 50 43. கர்த்தருக்கு அருவருப்பானவன் யார்? A. மாறுபாடுள்ளவன் B. பொல்லாதவன் C. பெருமை பாராட்டுகிறவன் D. மதியீனன் 44 / 50 44. பின்வருவனவற்றில் எது "போதும்" என்று கூறுகிறது? A. பாதாளம் B. மலட்டுக் கர்ப்பம் C. அக்கினி D. இவைகளில் ஒன்றும் இல்லை 45 / 50 45. ஞானம் தன் வீட்டில் எத்தனை தூண்களைக் கொண்டிருந்தது? A. மூன்று B. ஐந்து C. ஏழு D. பத்து 46 / 50 46. தாவீதின் குமாரனும் ______________ ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள் A. அசிரீயாவின் B. இஸ்ரவேலின் C. எகிப்தின் D. பாபிலோனின் 47 / 50 47. நீதிமானுடைய ____________ ஜீவனை பிறப்பிக்கும் A. வழி B. வேலை C. கனி D. பிரயாசம் 48 / 50 48. நம் கண்ணின் மணியைப் போல எதை காத்துக்கொள்ள வேண்டும்? A. ஞானம் B. அறிவு C. போதகத்தை D. புத்தி 49 / 50 49. ஆசிரியரின் புத்திக்கெட்டாத ஆச்சரியமான நான்கு விஷயங்களில் பின்வருவனவற்றில் எது ஒன்று? A. ஆகாயத்தில் கழுகினுடைய வழி B. பிறந்த குழந்தையின் அழுகை C. மரத்தின் வளர்ச்சி D. சூரிய உதயம் 50 / 50 50. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து. இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. நீதிமொழிகள் 1:7 B. நீதிமொழிகள் 3:5 C. நீதிமொழிகள் 22:6 D. நீதிமொழிகள் 31:10 By Wordpress Quiz plugin