Genesis Bible Quiz – Jun 2025

/50

ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢

மொத்த கேள்விகள்: 50       நேர வரம்பு: 25 நிமிடங்கள்

வழிமுறைகள்:

1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨.

2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும்.

தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!!

ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇

Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது)


Genesis Bible Quiz - Jun 2025

1 / 50

1. யாக்கோபின் குடும்பத்தாரில் இருந்து எகிப்துக்குச் சென்ற மொத்த மக்களின் எண்ணிக்கை என்ன?

2 / 50

2. கோசேனில் வசிக்க தனது குடும்பத்தை யோசேப்பு அழைத்தபோது இன்னும் எத்தனை ஆண்டுகள் பஞ்சம் வரவிருந்தது?

3 / 50

3. பென்யமீனை யாக்கோபிடம் பாதுகாப்பாகக் கொண்டுவருவதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக யார் உறுதியளித்தார்கள்?

4 / 50

4. நான் ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தி. நான் யார்?

5 / 50

5. நான் பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியாகவும், எகிப்தியனாகவும் இருந்தேன். நான் யார்?

6 / 50

6. "இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன்”, என்று சொன்னது யார் ?

7 / 50

7. லாபான் யாக்கோபின் சம்பளத்தை எத்தனை முறை மாற்றினான்?

8 / 50

8. "உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார்", யார் யாரிடம் சொன்னது?

9 / 50

9. இஸ்மவேல் எத்தனை வருஷம் வாழ்ந்தார்?

10 / 50

10. "நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்." யார் யாரிடம் சொன்னது?

11 / 50

11. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: லேயாளின் பிள்ளைகள்

12 / 50

12. சாராளுக்கு நியாயத்தீர்ப்பாக அபிமெலேக்கு ஆபிரகாமுக்கு என்ன கொடுத்தார்?

13 / 50

13. நான் ஒரு ஆடு மேய்க்கும் பெண்ணாக இருந்தேன், யாக்கோபு என்னை மிகவும் நேசித்தார். நான் யார்?

14 / 50

14. சோதோம் கொமோரா மீது கர்த்தர் வானத்திலிருந்து எதை வருஷிக்கப்பண்ணினார்?

15 / 50

15. நான் நாகோரின் மனைவியாகவும், ஆரானின் மகளாகவும் இருந்தேன். நான் யார்?

16 / 50

16. யாக்கோபு தனக்கு ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்க எங்கே அனுப்பப்பட்டார்?

17 / 50

17. கர்த்தருக்கு முன்பாக பலத்த வேட்டைக்காரன் என்று வர்ணிக்கப்படுபவர் யார்?

18 / 50

18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: ஏசாவின் மனைவிகள்

19 / 50

19. இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் _____________ நான் எப்படிக் காண்பேன்

20 / 50

20. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: நோவாவின் குமாரர்

21 / 50

21. ஆபிரகாமின் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு ஆகார் எந்த வனாந்தரத்தில் அலைந்து திரிந்தாள்?

22 / 50

22. காகத்திற்குப் பிறகு, நோவா எத்தனை முறை புறாவைப் பேழையிலிருந்து வெளியே அனுப்பினார், அது திரும்பி வரவில்லை?

23 / 50

23. கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிப்பதற்கு முன்பு யோர்தான் சமவெளி எவ்வாறு விவரிக்கப்பட்டது?

24 / 50

24. நான் யூதாவின் மூத்த மகன், கர்த்தருடைய பார்வையில் நான் பொல்லாதவனானேன், ஆகையால் அவர் என்னைக் கொன்றுபோட்டார். நான் யார்?

25 / 50

25. "கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ", யார் யாரிடம் சொன்னது?

26 / 50

26. இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை ஒப்பிடப்பட்ட கோத்திரம் எது?

27 / 50

27. ஏமோரையும் சீகேமையும் கொன்றது யார்?

28 / 50

28. தேவன் நோவாவிடம் கட்டச் சொன்ன பேழையின் நீளம் என்ன?

29 / 50

29. நான் மக்பேலா குகைக்குச் சொந்தமான ஒரு ஏத்தியன். நான் யார்?

30 / 50

30. சாவே பள்ளத்தாக்கின் மற்றொரு பெயர் என்ன?

31 / 50

31. "அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும்" என்று யார் யாக்கோபிடம் சொன்னது?

32 / 50

32. செபுலோனும் நப்தலியும் சில்பாவின் குமாரர்

33 / 50

33. சேத்தைப் பெற்ற பிறகு ஆதாம் எத்தனை வருஷம் வாழ்ந்தார்?

34 / 50

34. பெத்துவேலின் தந்தை யார்?

35 / 50

35. ஆபிராம் ஆரானிலிருந்து புறப்பட்டபோது அவருக்கு எத்தனை வயது?

36 / 50

36. ஏனோஸின் தந்தை யார்?

37 / 50

37. "என் சொப்பனத்திலே ஒரு திராட்சைச்செடி எனக்கு முன்பாக இருக்கக் கண்டேன்". யார் யாரிடம் சொன்னது?

38 / 50

38. எந்த தலைமுறையில் ஆபிரகாமின் சந்ததியினர் தங்கள் தேசத்திற்குத் திரும்புவார்கள் என்று தேவன் கூறினார்?

39 / 50

39. யாக்கோபு தேவதூதர்களைச் சந்தித்த இடத்திற்கு என்ன பெயர் வைத்தார்?

40 / 50

40. இஸ்மவேல் விருத்தசேதனம் செய்யப்பட்டபோது அவருக்கு எத்தனை வயது?

41 / 50

41. ஜீவ விருட்சத்திற்குப் போகும் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்தின் கிழக்கே தேவன் என்ன வைத்தார்?

42 / 50

42. யோர்தானுக்கு அப்பால் எகிப்தியர்கள் யாக்கோபுக்காக துக்கம் அனுசரித்த ஸ்தலத்திற்கு என்ன பெயர் வழங்கப்பட்டது?

43 / 50

43. காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருந்த துரவு எது?

44 / 50

44. யாக்கோபு எகிப்து தேசத்தில் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்?

45 / 50

45. கேராரின் மேய்ப்பர்களால் வாக்குவாதம்பண்ணின முதல் துரவின் பெயர் என்ன?

46 / 50

46. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: ஏதேன் தோட்டத்திலிருந்து கிளைத்த ஆறுகள்

47 / 50

47. சீகேமில் யாக்கோபு கட்டிய பலிபீடத்திற்கு அவர் என்ன பெயர் வைத்தார்?

48 / 50

48. யாக்கோபு யாரை ஆசீர்வதிக்கும்போது தன் வலது கையை வைத்தார்?

49 / 50

49. ஆழத்தின்மேல் என்ன இருந்தது?

50 / 50

50. ஜலப்பிரளயத்தின் போது பூமியில் எத்தனை நாட்கள் ஜலம் பிரவாகித்துக்கொண்டிருந்தது?

2 thoughts on “Genesis Bible Quiz – Jun 2025”

Leave a Comment