Acts Bible Quiz – Aug 2025 August 30, 2025 by reach.grace146 /50 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 50 நேர வரம்பு: 25 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) Acts Bible Quiz - Aug 2025 NamePhone NumberEmail 1 / 50 1. ஸ்தேவான் ____________ வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான் A. விசுவாசத்தினாலும் B. பலத்தினாலும் C. அன்பினாலும் D. நம்பிக்கையினாலும் 2 / 50 2. ______________ நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள் A. லீதியாள் B. ரோதை C. சப்பீராள் D. தபீத்தாள் 3 / 50 3. அவன் பிரயாணமாய்ப் போய், _________ சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது A. எருசலேமுக்கு B. செசரியாவுக்கு C. தமஸ்குவுக்கு D. அந்தியோகியாவுக்கு 4 / 50 4. அப்பொழுது அவர்கள்: __________ தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி A. யாக்கோபுக்கும் B. ஆபிரகாமுக்கும் C. தாவீதுக்கும் D. மோசேக்கும் 5 / 50 5. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: ஞானஸ்நானம் பெற்றவர் A. கொர்நேலியு B. எத்தியோப்பிய மந்திரி C. லீதியாள் D. நிக்கொதேமு 6 / 50 6. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: பேதுருவும் யோவானும் நியாயசங்கத்தில் உரையாற்றியபோது அங்கே இருந்தவர்கள் A. அன்னா B. காய்பா C. ஏரோது D. அலெக்சந்தர் 7 / 50 7. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: அந்தியோகியா சபையின் தீர்க்கதரிசிகளும் போதகர்களும் A. பர்னபா B. ஸ்தேவான் C. சிமியோன் D. மனாயீன் 8 / 50 8. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: பேதுருவின் ஞானதிருஷ்டி A. கடல் உயிரினம் B. ஆகாயத்துப் பறவைகள் C. காட்டுமிருகங்கள் D. ஊரும் பிராணிகள் 9 / 50 9. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: பந்தி விசாரிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு பேர் A. ஸ்தேவான் B. பிரொகோர் C. பிலிப்பு D. பர்னபா 10 / 50 10. உயிர்த்தெழுந்த பிறகு, இயேசு எத்தனை நாட்கள் தம்மை அப்போஸ்தலர்களுக்கு உயிருடன் காட்சிக்கொடுத்து தேவனுடைய ராஜ்யத்தைப் பற்றிப் பேசினார்? A. 3 B. 12 C. 30 D. 40 11 / 50 11. சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் எத்தனை வருஷங்கள் தேவன் இஸ்ரவேலுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்தினார்? A. 400 B. 430 C. 450 D. 500 12 / 50 12. சப்பாணி குணமடைந்த பிறகு பேதுருவின் செய்தி மூலமாக எத்தனை பேர் விசுவாசிகளானார்கள்? A. 3000 B. 4000 C. 5000 D. 6000 13 / 50 13. தீவுக்கு முதலாளியாகிய புபிலியு பவுலையும் அவருடன் இருந்தவர்களையும் எத்தனை நாட்கள் ஏற்றுக்கொண்டு பட்சமாய் விசாரித்தான்? A. 2 B. 3 C. 5 D. 7 14 / 50 14. இராத்திரியில் பவுலை செசரியாவுக்கு அழைத்துச் செல்ல எத்தனை காலாட்களை ஆயத்தம் பண்ண கட்டளையிடப்பட்டது? A. 400 B. 300 C. 200 D. 100 15 / 50 15. எந்த பட்டணத்தில் பிலிப்பு கிறிஸ்துவை பிரசங்கித்து பல அதிசயங்களை செய்ததினால் மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று? A. லீஸ்திரா B. தமஸ்கு C. சமாரியா D. யோப்பா 16 / 50 16. இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியா பட்டணத்துக் கப்பலை, எந்த லீசியா நாட்டு பட்டணத்தில் நூற்றுக்கு அதிபதி கண்டுபிடித்தார்? A. தெர்பை B. மீறா C. லீஸ்திரா D. இக்கோனியா 17 / 50 17. எந்த நேரத்தில் கொர்னேலியு தரிசனம் கண்டான்? ஒன்பதாம் மணி நேரத்திலா ஆறாம் மணி நேரத்திலா ? A. ஆறாம் மணி நேரம் B. ஒன்பதாம் மணி நேரம் 18 / 50 18. பெந்தெகொஸ்தே நாளில், பேதுரு தனது பிரசங்கத்தின் போது எந்த தீர்க்கதரிசி உரைத்தபடி நிறைவேறிற்று என்று கூறினார்? யோவேலா அல்லது எரேமியாவா? A. யோவேல் B. எரேமியா 19 / 50 19. பேதுருவும் யோவானும் விசாரணை செய்யப்பட்டபோது இருந்த பிரதான ஆசாரியன் அன்னாவா அல்லது காய்பாவா? A. காய்பா B. அன்னா 20 / 50 20. சாலொமோனின் மண்டபத்தில் பேதுரு தனது பிரசங்கத்தில் இயேசுவை என்னவென்று குறிப்பிட்டார்? "ஜீவாதிபதி" என்றா அல்லது "பிரதான மேய்ப்பர்" என்றா? A. ஜீவாதிபதி B. பிரதான மேய்ப்பர் 21 / 50 21. அப்போஸ்தலர் 2-ல் உள்ள விசுவாசிகள் எல்லாவற்றையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்களா அல்லது தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து கொண்டார்களா? A. உடைமைகளைப் பகிர்ந்து கொண்டார்கள் B. பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள் 22 / 50 22. இயேசுவின் சகோதரர்கள் சீஷர்களோடும் சில ஸ்திரீகளோடும் மேல்வீட்டில் ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். A. சரி B. தவறு 23 / 50 23. பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூட பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினான் A. சரி B. தவறு 24 / 50 24. பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால், லீஸ்திராவின் மக்கள் அவரை "யூப்பித்தர்" என்று அழைத்தனர் A. சரி B. தவறு 25 / 50 25. ஏரோது யாக்கோபின் சகோதரனான யோவானை பட்டயத்தினாலே கொன்றான். A. சரி B. தவறு 26 / 50 26. "ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. அப்போஸ்தலர் 7:28 B. அப்போஸ்தலர் 17:28 C. அப்போஸ்தலர் 16:15 D. அப்போஸ்தலர் 8:16 27 / 50 27. "அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. அப்போஸ்தலர் 3:12 B. அப்போஸ்தலர் 3:16 C. அப்போஸ்தலர் 4:12 D. அப்போஸ்தலர் 4:16 28 / 50 28. "நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. அப்போஸ்தலர் 1:4 B. அப்போஸ்தலர் 1:5 C. அப்போஸ்தலர் 1:6 D. அப்போஸ்தலர் 1:7 29 / 50 29. "மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? A. அப்போஸ்தலர் 3:12 B. அப்போஸ்தலர் 5:29 C. அப்போஸ்தலர் 7:11 D. அப்போஸ்தலர் 9:11 30 / 50 30. சீப்புருதீவானும் லேவியனாகிய நான் என்னுடைய நிலத்தைவிற்று அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தேன். நான் யார்? A. அனனியா B. ஸ்தேவான் C. பிலிப்பு D. பர்னபா 31 / 50 31. நான் பெர்னீக்கேயாவுடன் செசரியாவுக்கு வந்து பவுலின் வாதத்தைக் கேட்டேன். நான் யார்? A. யூலியு B. பேலிக்ஸ் C. அகிரிப்பா D. பெஸ்து 32 / 50 32. நான் ஒரு பரிசேயனாகவும், நியாயசாஸ்திரியாகவும் இருந்தேன். அப்போஸ்தலர்களை விட்டுவிடுமாறு ஆலோசனை சொன்னேன். நான் யார்? A. காய்பா B. கமாலியேல் C. அன்னா D. பேலிக்ஸ் 33 / 50 33. நான் எத்தியோப்பியர்களின் ராஜஸ்திரீ, பிலிப்பு வழியில் என்னுடைய அதிகாரியை சந்தித்தபோது அவர் ஏசாயாவை வாசித்துக் கொண்டிருந்தார். நான் யார்? A. சேபா B. லீதியாள் C. கந்தாகே D. மார்த்தாள் 34 / 50 34. நான் தியத்தீராவைச் சேர்ந்த இரத்தாம்பரம் விற்கிறவள், பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் என் இருதயத்தைத் திறந்தருளினார். நான் யார்? A. பிரிஸ்கில்லா B. பெபேயாள் C. குலோவேயாள் D. லீதியாள் 35 / 50 35. கர்த்தரைச் சந்தித்த பிறகு, சவுல் தமஸ்குவில் உள்ள நேர்த்தெருவில் உள்ள என் வீட்டில் தங்கினார். நான் யார்? A. யூதா B. அனனியா C. கொர்நேலியு D. கிறிஸ்பு 36 / 50 36. "சீக்கிரமாய் எழுந்திரு" என்று யார் யாரிடம் சொன்னது? A. இயேசு சவுலிடம் B. தூதன் பேதுருவிடம் C. பேதுரு கொர்நேலியுவிடம் D. பவுல் சிலாவிடம் 37 / 50 37. "நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது", என்று யார் யாரிடம் சொன்னது? A. அகிரிப்பா பவுலிடம் B. பெஸ்து பவுலிடம் C. பேலிக்ஸ் பவுலிடம் D. கமாலியேல் பவுலிடம் 38 / 50 38. "வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்", என்று யார் யாரிடம் சொன்னது? A. பவுல் பெலிக்ஸிடம் B. பவுல் அகிரிப்பாவிடம் C. ஸ்தேவான் நியாயசங்கத்திடம் D. பவுல் அனனியாவிடம் 39 / 50 39. யூத ஸ்திரீயான துருசில்லா யாருடைய மனைவி? A. பேலிக்ஸ் B. அகிரிப்பா C. பெஸ்து D. யூலியு 40 / 50 40. பவுல் இத்தாலிக்கு கப்பல் மூலம் அனுப்பப்பட்டபோது, அவர் ஒப்படைக்கப்பட்ட அகுஸ்து பட்டாளத்தைச் சேர்ந்த நூற்றுக்கு அதிபதி யார்? A. கொர்நேலியு B. கிலவுதியு C. பேலிக்ஸ் D. யூலியு 41 / 50 41. பவுலையும் சீலாவையும் ஏற்றுக்கொண்டதினால், பொல்லாத கூட்டத்தினரால் பிடிக்கப்பட்டு, பட்டணத்து அதிகாரிகளுக்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டவர் யார்? A. கிறிஸ்பு B. அலெக்சந்தர் C. யாசோன் D. அப்பொல்லோ 42 / 50 42. அக்கெல்தமா என்ற பெயரின் அர்த்தம் என்ன? A. குயவனுடைய நிலம் B. மரண பள்ளத்தாக்கு C. இரத்தநிலம் D. துரோகத்தின் தோட்டம் 43 / 50 43. தேவாலயத்தின் எந்த வாசலண்டையில் சப்பாணி பிச்சை எடுத்துகொண்டிருந்தான்? A. ஆட்டு வாசல் B. அலங்கார வாசல் C. மீன் வாசல் D. பள்ளத்தாக்கின் வாசல் 44 / 50 44. பரிசுத்த ஆவியைக் கொடுக்கும் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும்படி பேதுருவுக்கும் யோவானுக்கும் பணம் கொடுக்க வந்தது யார்? A. அனனியா B. பர்யேசு C. எலிமா D. மாயவித்தைக்காரனாயிருந்த சீமோன் 45 / 50 45. பவுலுடனும் பர்னபாவுடனும் அந்தியோகியாவுக்கு அனுப்பப்பட தேர்ந்தெடுக்கப்பட்ட யூதாவின் மற்றொரு பெயர் என்ன? A. பர்சபா B. சீலா C. தீமோத்தேயு D. மாற்கு 46 / 50 46. லீஸ்திராவில் இருந்த சீஷன் யார், அவருடைய தந்தை ஒரு கிரேக்கர்? A. சீலா B. அப்பொல்லோ C. தீமோத்தேயு D. பர்னபா 47 / 50 47. மாற்கு என்னும் மறுபேர் கொண்ட யோவானின் தாயார் மரியாளின் வீட்டுக் கதவைப் பேதுரு தட்டியபோது, யார் வந்து ஒற்றுக்கேட்டது ? A. மார்த்தாள் B. மரியாள் C. ரோதை D. சப்பீராள் 48 / 50 48. எத்தனை நாட்கள் சவுல் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான்? A. 3 B. 4 C. 5 D. 7 49 / 50 49. எத்தனை மணி நேரத்திற்குப் பிறகு சப்பீராள் அனனியாவுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் உள்ளே வந்தாள்? A. 1 B. 2 C. 3 D. 4 50 / 50 50. சவுலை குணப்படுத்த அனுப்பப்பட்டவர் யார்? A. பர்னபா B. பிலிப்பு C. பேதுரு D. அனனியா By Wordpress Quiz plugin
Good