Exodus Bible Quiz – Oct 2025 October 25, 2025 by reach.grace146 /50 ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்! 🙏🙏🙏📢 வேதமே விளக்கு பைபிள் வினாடி வினா போட்டிக்கு வரவேற்கிறோம்! 📢 மொத்த கேள்விகள்: 50 நேர வரம்பு: 25 நிமிடங்கள் வழிமுறைகள்: 1. கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்தால், உங்கள் விவரங்களை உள்ளிடுமாறு கேட்கப்படுவீர்கள். உங்கள் முழுப்பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்கவும் (கட்டாயம்), மின்னஞ்சல் ஐடி விருப்பமானது. இது வெற்றியாளர்களை எளிதில் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும் உதவும். 🎁✨. 2. உங்கள் விவரங்களை உள்ளிட்டு பின்பு 'Next' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் 25 நிமிட டைமர் தொடங்கும். 90% நேரம் கடந்துவிட்டால், டைமர் சிவப்பு நிறமாக மாறும்🔴. டைமர் 00:00 ஐ அடைந்தவுடன் வினாடி வினா தானாகவே சமர்ப்பிக்கப்படும் என்பதால், உங்கள் நேரத்தை கவனமாக நிர்வகிக்கவும். தேவனுடைய கரம் உங்களோடு இருந்து உங்களை வழிநடத்துவதாக!!! ஆரம்பிக்கலாம்! கீழே உள்ள 'Start' பொத்தானைக் கிளிக் செய்யவும்👇👇👇 Quiz has expired (வினாடி வினா நேரம் காலாவதியானது) Exodus Bible Quiz - Oct 2025 NamePhone NumberEmail 1 / 50 1. அப்பொழுது மோசே: உம்முடைய __________ எனக்குக் காண்பித்தருளும் என்றான். a. மகிமையை b. முகத்தை c. வல்லமையை d. சிங்காசனத்தை 2 / 50 2. மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் ______________ அல்ல a. துணிச்சலானவன் b. உண்மையுள்ளவன் c. வாக்குவல்லவன் d. புத்திசாலி 3 / 50 3. கர்த்தர் மோசேயிடம்: உன்னைக் காணும்போது அவன் ________ மகிழும் a. ஆவி b. கண்கள் c. ஆத்துமா d. இருதயம் 4 / 50 4. தேவனுக்கு பயந்த இரண்டு எபிரேய மருத்துவச்சிகளின் பெயர்கள் என்ன? a. மிரியாம், யோகெபேத் b. சிப்பிராள், பூவாள் c. பூவாள், யோகெபேத் d. சிப்பிராள், யோகெபேத் 5 / 50 5. மோசேயின் முதல் மகனின் பெயர் என்ன? a. கெர்சோம் b. எலியேசர் c. நாதாப் d. அபியூ 6 / 50 6. செங்கடலைக் கடந்த பிறகு, தம்புருகளுடன் பெண்களை வழிநடத்தியது யார்? a. யோகெபேத் b. சிப்போராள் c. ஆஸ்நாத் d. மிரியாம் 7 / 50 7. மார்ப்பதக்கத்தில் எத்தனை கற்கள் இருந்தன? a. 7 b. 10 c. 12 d. 9 8 / 50 8. மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு எத்தனை குமாரத்திகள் இருந்தார்கள்? a. 2 b. 4 c. 6 d. 7 9 / 50 9. மோசே பார்வோனிடம் பேசியபோது அவருக்கு எத்தனை வயது? a. 80 b. 70 c. 60 d. 90 10 / 50 10. எந்த வாதை எகிப்தின் நிலத்தை தவளைகளால் மூடியது? a. இரண்டாவது b. மூன்றாவது c. நான்காவது d. ஐந்தாவது 11 / 50 11. எகிப்தை எவ்வளவு நாட்கள் இருள் மூடியிருந்தது? a. 1 b. 3 c. 2 d. 7 12 / 50 12. எத்தனை இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து கால்நடையாக புறப்பட்டனர் (புருஷர்கள் மட்டும்)? a. 300,000 b. 400,000 c. 600,000 d. 800,000 13 / 50 13. பொன் கன்றுக்குட்டி சம்பவத்திற்குப் பிறகு லேவியர்களின் பட்டயதால் எத்தனை பேர் வீழ்ந்தார்கள்? a. 1000 b. 2000 c. 3000 d. 4000 14 / 50 14. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: ஆசரிப்பு கூடாரம் செய்ய பயன்பட்டவை a. பொன் b. வெள்ளி c. வெண்கலம் d. இரும்பு 15 / 50 15. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: மார்ப்பதக்கத்தின் நாலாம் பத்தி இரத்தினக்கற்கள் a. கோமேதகம் b. மரகதம் c. யஸ்பி d. படிகப்பச்சை 16 / 50 16. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: இஸ்ரவேலின் வனாந்திர பிரயாணம் a. ராமசேஸ் b. சுக்கோத் c. ஏத்தாம் d. எரிகோ 17 / 50 17. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: சித்திரவேலை செய்தவர்கள் (select multiple answer options) a. ஆரோன் b. பெசலெயேல் c. மோசே d. அகோலியா 18 / 50 18. பொருந்தாச் சொல்லைக் கண்டறிக: லேவியின் குமாரர் a. கெர்சோன் b. மெராரி c. ஊசியேல் d. கோகாத் 19 / 50 19. மோசே முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிவதை பார்த்த மலையின் பெயர் என்ன? a. சினாய் மலை b. ஓரேப் பர்வதம் c. சீயோன் மலை d. கர்மேல் 20 / 50 20. மோசே மாசா என்றும் மேரிபா என்றும் பெயர் சூட்டியதற்குக் காரணம் என்ன? a. ஜனங்கள் அமலேக்கியருக்கு எதிராகப் போரிட்டார்கள் b. ஜனங்கள் மோசேயோடு வாக்குவாதம் செய்து, கர்த்தரைச் சோதித்தார்கள் c. ஜனங்கள் செங்கடலைக் கடந்த பிறகு மகிழ்ச்சியடைந்தனர் d. ஜனங்கள் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினார்கள் 21 / 50 21. மோசே எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்? a. லேவி b. யூதா c. எப்பிராயீம் d. பென்யமீன் 22 / 50 22. பெசலெயேல் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்? a. லேவி b. யூதா c. எப்பிராயீம் d. பென்யமீன் 23 / 50 23. அகோலியாப் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்? a. ரூபன் b. யூதா c. எப்பிராயீம் d. தான் 24 / 50 24. யோசுவா எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்? a. ரூபன் b. யூதா c. எப்பிராயீம் d. தான் 25 / 50 25. "கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்?" என்று மோசே சொன்னபோது, எந்தக் கோத்திரத்தினர் அவருடைய பக்கம் நின்றனர்? a. யூதா b. லேவி c. பென்யமீன் d. ரூபன் 26 / 50 26. ஏபோத்தில் இருந்த ஞாபகக்குறிக் கற்கள் இஸ்ரவேலின் 12 கோத்திரங்களைக் குறிக்கின்றன a. சரி b. தவறு 27 / 50 27. மோசே செங்கடலில் மிதக்கும் ஒரு கூடையில் பார்வோனின் குமாரத்தியினால் கண்டுபிடிக்கப்பட்டார். a. சரி b. தவறு 28 / 50 28. இஸ்ரவேலர் கோசேனில் வசித்து வந்தனர், அங்கு வண்டுகளின் தொல்லை அவர்களைப் பாதிக்கவில்லை. a. சரி b. தவறு 29 / 50 29. பகலில் அவர்களை வழிநடத்த அக்கினிஸ்தம்பத்திலும் , இரவில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் கர்த்தர் சென்றார். a. சரி b. தவறு 30 / 50 30. "மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்?" என்று யார் யாரிடம் சொன்னது? a. தேவன் ஆரொனிடம் b. மோசே ஆரொனிடம் c. மோசே பார்வோனிடம் d. தேவன் மோசேயிடம் 31 / 50 31. ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் என்னுடன் முகமுகமாய்ப் பேசினார். நான் யார்? a. ஆரோன் b. யோசுவா c. காலேப் d. மோசே 32 / 50 32. நான் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்த வாலிபன். நான் யார்? a. யோசுவா b. எலியேசர் c. நாதாப் d. கெர்சோம் 33 / 50 33. இஸ்ரவேலர் எகிப்திலிருந்து புறப்பட்டபோது நான் யோசேப்பின் எலும்புகளை எடுத்துச் சென்றேன். நான் யார்? a. கெர்சோம் b. யோசுவா c. மோசே d. காலேப் 34 / 50 34. மோசேயின் கைகள் உயர்த்தப்பட்டபோது நான் அமலேக்கை முறி அடித்தேன். நான் யார்? a. ஆரோன் b. யோசுவா c. காலேப் d. எலியேசர் 35 / 50 35. விநோதமான வேலைகளை யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டேன். நான் யார்? a. அகோலியாப் b. யோசுவா c. காலேப் d. பெசலெயேல் 36 / 50 36. மன்னா முதலில் எங்கு தோன்றியது? a. ரெவிதீம் b. சீனாய் c. சீன்வனாந்தரம் d. மாரா 37 / 50 37. மோசேயின் மாமன் பெயர் என்ன? a. நாகோர் b. ஓபா c. எத்திரோ d. எலியேசர் 38 / 50 38. யுத்தத்தின் போது மோசேயின் கைகளைத் தாங்கியவர்கள் யார்? a. ஆரோன் , யோசுவா b. ஆரோன், ஊர் c. ஆரோன், காலேப் d. யோசுவா, காலேப் 39 / 50 39. பிரதான ஆசாரியரின் பரிசுத்த கிரீடத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது? a. மகா பரிசுத்தம் b. கர்த்தருக்கு முன்பாகப் பரிசுத்தம் c. கர்த்தரிடமிருந்து பரிசுத்தம் d. கர்த்தருக்குப் பரிசுத்தம் 40 / 50 40. வீட்டுவாசல் நிலைக்கால்களில் எந்த மிருகத்தின் இரத்தம் தெளிக்கப்பட்டது ? a. ஆடு b. ஆட்டுக்குட்டி c. புறா d. குருவி 41 / 50 41. ஏழாவது வாதை என்ன? a. வெட்டுக்கிளிகள் b. கொப்புளங்கள் c. இருள் d. கல்மழை 42 / 50 42. மந்திரவாதிகளால் எந்த வாதையை பிறப்பிக்க கூடாமற்போயிற்று ? a. பேன் b. இரத்தம் c. தவளைகள் d. வண்டுகள் 43 / 50 43. வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் என்ன செய்தார்கள்? a. ஆராதித்தனர் b. பிரயாணம் பண்ணுவார்கள் c. பிரயாணம் பண்ணாதிருப்பார்கள் d. காத்திருப்பார்கள் 44 / 50 44. ஏபோத் பின்வரும் அனைத்து பொருட்களாலும் செய்யப்பட்டது, ஆனால் ஒன்றை தவிர. அது என்ன? a. பொன் b. வெள்ளி c. இளநீலநூல் d. இரத்தாம்பரநூல் 45 / 50 45. ஏன் தேவன் மருத்துவச்சிகளுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்? a. அவர்கள் பார்வோனுக்கு அஞ்சினார்கள் b. அவர்கள் தேவனுக்கு பயந்தார்கள் c. அவர்கள் மோசேயைக் காப்பாற்றினார்கள் d. பார்வோனிடம் பொய் சொன்னார்கள் 46 / 50 46. மோசேயின் பெற்றோர் எந்த கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்? a. யூதா b. எப்பிராயீம் c. பென்யமீன் d. லேவி 47 / 50 47. "நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன?", என்று யார் யாரிடம் சொன்னது? a. ஆரோன் மோசேயிடம் b. யோசுவா மோசேயிடம் c. எத்திரோ மோசேயிடம் d. பார்வோன் மோசேயிடம் 48 / 50 48. "கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள்", என்று யார் யாரிடம் சொன்னது? a. பெசலெயேல் ஒகோலியாப்பிடம் b. மோசே ஆரொனிடம் c. ஆரோன் மோசேயிடம் d. சித்திரை வேலைசெய்பவர்கள் மோசேயிடம் 49 / 50 49. "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? a. யாத்திராகமம் 14:14 b. யாத்திராகமம் 14:15 c. யாத்திராகமம் 16:16 d. யாத்திராகமம் 16:14 50 / 50 50. "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம்". இந்த வசனத்தின் இருப்பிடம் எது? a. யாத்திராகமம் 20:4 b. யாத்திராகமம் 20:3 c. யாத்திராகமம் 20:5 d. யாத்திராகமம் 20:2 By Wordpress Quiz plugin